/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கண் துடைப்பு! பஸ் ஸ்டாண்டில் மீண்டும் 'ஆக்கிரமிப்பு'
/
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கண் துடைப்பு! பஸ் ஸ்டாண்டில் மீண்டும் 'ஆக்கிரமிப்பு'
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கண் துடைப்பு! பஸ் ஸ்டாண்டில் மீண்டும் 'ஆக்கிரமிப்பு'
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கண் துடைப்பு! பஸ் ஸ்டாண்டில் மீண்டும் 'ஆக்கிரமிப்பு'
ADDED : ஏப் 24, 2025 06:26 AM

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை கண்துடைப்பாக உள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, உடுமலை, பொள்ளாச்சி, பழநி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். 'ஸ்மார்ட் சிட்டி' பஸ் ஸ்டாண்ட் பெயருக்கு தான் 'ஸ்மார்ட்' ஆக உள்ளது. சுகாதார சீர்கேடு, நடைபாதைகளில் கடைவிரிப்பு போன்றவை தொடர்கதையாக உள்ளது. வெளியூர் செல்ல வரும் பயணிகள், ஒதுங்கி நிற்கவும், நடந்து செல்லவும் கூட இடமில்லாத சூழலில் உள்ளது.
இதுதொடர்பாக 'தினமலர்' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி மூலம் அமர்த்தப்பட்ட செக்யூரிட்டிகள், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளுக்கு சென்று, நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள பொருட்களை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அப்போது, கடை ஊழியர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, பொருட்களை உள்ளே நகர்த்தி வைத்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் பழையபடி ஆக்கிரமிக்கப்பட்டது.
''திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி நிர்வாகங்கள், பஸ் ஸ்டாண்ட்டை துாய்மைாக பேணி காப்பது, அசுத்தம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்றவற்றை திறம்பட செய்யும் போது, தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூரில் மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது'' என்று பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்.

