/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிர்வாகியை தாக்கி நகை பறிப்பு; ஹிந்து முன்னணியினர் முற்றுகை
/
நிர்வாகியை தாக்கி நகை பறிப்பு; ஹிந்து முன்னணியினர் முற்றுகை
நிர்வாகியை தாக்கி நகை பறிப்பு; ஹிந்து முன்னணியினர் முற்றுகை
நிர்வாகியை தாக்கி நகை பறிப்பு; ஹிந்து முன்னணியினர் முற்றுகை
ADDED : நவ 18, 2024 06:32 AM

திருப்பூர் ; ஹிந்து முன்னணி நிர்வாகியைத் தாக்கி தங்கச்சங்கிலியைப் பறித்த குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், போலீசாரிடம் நேரில் வலியுறுத்தினார்.
திருப்பூர், முத்தணம் பாளையம், வாய்க்கால்மேடு, கார்த்திக் நகரை சேர்ந்தவர் பாஸ்கர பாண்டியன், 49; ஹிந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர். காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் அருகே அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு, அலுவலகத்தில் இருந்து டூ வீலரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வாய்க்கால்மேடு பகுதியை கடந்ததும், டூ வீலரில் பின் தொடர்ந்து வந்தவர்கள், கட்டையால் தலையின் பின்புறம் தாக்கியுள்ளனர்.
நிலைதடுமாறி கீழே விழுந்ததும், மற்றொருவர், பாஸ்கர பாண்டியன் முகத்தை நோக்கி, மிளகாய் பொடியை வீசியுள்ளார். பாஸ்கர பாண்டியனை தாக்கி, அவர் அணிந்திருந்த, ஆறு பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர பாண்டியன், இதுகுறித்து நல்லுார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பொதுச்செயலாளர் கிேஷார்குமார் உள்ளிட்டோர், நல்லுார் ஸ்டேஷனுக்கு சென்று, உடனடியாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
ஹிந்து முன்னணியை சேர்ந்த ஏராளமானோர், நல்லுார் ஸ்டேஷன் முன் கூடியதால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.