/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டா கிடைக்காததால் எழுந்த ஆவேசம்
/
பட்டா கிடைக்காததால் எழுந்த ஆவேசம்
ADDED : ஆக 22, 2025 11:54 PM

தி ருப்பூரில், பட்டா வழங்கும் நிகழ்ச்சியில், பட்டா கிடைக்காதவர்கள், தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜை முற்றுகையிட்டனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி பகுதியில், 134 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 'நாற்பது ஆண்டாக வசிக்கிறோம். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்' என அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இவர்களில், 93 குடும்பத்தினருக்கு அரசின் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி கொங்கணகிரியில் நேற்றுமுன் தினம் நடந்தது.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ்(தி.மு.க.,) பங்கேற்று பட்டா வழங்கினார். பட்டா வழங்கி புறப்படுகையில், பட்டா கிடைக்காத, 41 குடும்பத்தினர், 'எங்களுக்கு எப்போது பட்டா கிடைக்கும்' என கேட்டு எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு சூழ்ந்து கொண்டனர்.
'அரசின் விதிகளின்படி, 2 சென்ட் அளவில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு சென்ட் அளவுக்கு மேல் உள்ள இடத்தில் குடியிருந்து வருபவர்கள் இரண்டு சென்ட் போக பயன்படுத்தி வரும் மீதி உள்ள இடங்களுக்கு பணம் கட்டியதும் உடனடியாக பட்டா வழங்கப்படும்,' என எம்.எல்.ஏ., விளக்கியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.