/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பில்டிங் 'ஸ்ட்ராங்' ஆக இருக்க 'பேஸ்மென்ட்' தானே பிரதானம்
/
பில்டிங் 'ஸ்ட்ராங்' ஆக இருக்க 'பேஸ்மென்ட்' தானே பிரதானம்
பில்டிங் 'ஸ்ட்ராங்' ஆக இருக்க 'பேஸ்மென்ட்' தானே பிரதானம்
பில்டிங் 'ஸ்ட்ராங்' ஆக இருக்க 'பேஸ்மென்ட்' தானே பிரதானம்
ADDED : ஏப் 07, 2025 05:52 AM

'கலை அறிவியல் படிப்புகளில் வாய்ப்புகள்' எனும் தலைப்பில், கோவை எஸ்.என்.ஆர்., கல்லுாரி, தமிழ்ப் பேராசிரியர் ஜெயபால் பேசியதாவது:
உயர்கல்வியை தேடும் உங்களுக்கு கற்றல், கேட்டல் திறன், சொல்லறிவு முக்கியம். அழகாக, தெளிவாக, வேகமாக எழுதுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எந்தப் பட்டப்படிப்பு, பாடப்பிரிவை தேர்வு செய்தாலும், கணினி அறிவு கட்டாயம். 'ஆர்ட்ஸ்' தானே என அலட்சியமாக இருக்கக் கூடாது. முதுகலை படிப்பு, வேலைவாய்ப்புக்கு செல்லும் போது, கணினி தெரிந்தவருக்கே முன்னுரிமை தரப்படும்.
அமெரிக்காவில், மொழிபெயர்ப்பாளருக்கு கூட வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதில் கூட ஆர்வம் செலுத்தி, பலமொழிகளை கற்று, வேலைவாய்ப்பு தேடலாம். என்ன படிக்க வேண்டும் என்பதை விட எப்படி படிக்க வேண்டும் என்பதே முக்கியம். 'படிச்சிட்டு பார்த்துக்கலாம்' என்ற மனநிலை இருக்கக் கூடாது. அஸ்திவாரம் போடாமல் கட்டடம் கட்டக் கூடாது. பில்டிங் 'ஸ்ட்ராங்' ஆக, உயர்கல்வியை தேர்வு செய்யும் போது, தொலை நோக்கு பார்வை வேண்டும்.ஆராய்ச்சி படிப்புக்கு மேலைநாடுகளில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்; அதன் பின் படிப்பை தேர்வு செய்யுங்கள். அதிக புத்தகங்களை படியுங்கள். ஆசிரியராக வேண்டும் என எண்ணினால், பி.எட்., எம்.எட்., பி.எச்.டி., கட்டாயம். பேராசிரியராக வேண்டுமென்றால், தகுதித்தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
மொபைல்போனில் காட்டும் ஆர்வத்தை, படிப்பில் காட்டுங்கள்; பாடப்பிரிவை தேர்வு செய்வதில் காட்டுங்கள். ஆட்டுமந்தையாக, பத்தோடு பதினொன்றாக பயணிக்கக்கூடாது. உங்களை தேடி வாய்ப்பு வரும் வகையில் திறமையானவர்களாக மாறுங்கள். கல்லுாரிகளுக்கு நேரில் சென்று பார்த்து, தேர்வு செய்யுங்கள்.
உயர்கல்வி படிக்கும் போது பொறுப்பு கூடுகிறது என்பதை உணருங்கள். நன்றாக உழையுங்கள். ஜெயித்து விடுவீர்கள்.

