/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த சுய உதவிக்குழு சாதித்தது 'இளந்தளிர்'
/
சிறந்த சுய உதவிக்குழு சாதித்தது 'இளந்தளிர்'
ADDED : ஜூன் 17, 2025 12:14 AM

திருப்பூர்; ஊத்துக்குளி, சென்னிமலைபாளையம் இளந்தளிர் மகளிர் சுய உதவிக்குழு, மாநில அளவில் சிறந்த குழுவுக்கான 'மணிமேகலை' விருது பெற்றுள்ளது.
ஊத்துக்குளி தாலுகா, சென்னிமலைபாளையத்தில், 14 பெண்களை உறுப்பினராக கொண்டு, கடந்த 2020 முதல் செயல்பட்டுவருகிறது, இளந்தளிர் மகளிர் சுய உதவிக்குழு.
சென்னையில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்கள் தின விழாவில், மாநில அளவில் சிறந்த மகளிர் குழுக்களுக்கு, துணை முதல்வர் உதய நிதி விருது வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில், இளந்தளிர் குழுவுக்கு சிறந்த மகளிர் குழுவுக்கான 'மணிமேகலை - 2024-25' விருது கிடைத்துள்ளது.
குழு தலைவர் பிரியங்கா கூறியதாவது:
எங்கள் இளந்தளிர் சுய உதவிக்குழு மூலம், கிராமப்புறங்களில் துாய்மை பணி மேற்கொள்வது உள்பட ஏராளமான சமூக பணிகள் மேற்கொண்டுவருகிறோம். இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்கிறோம். துணை முதல்வர் கையால் விருது பெற்றதை, எங்கள் குழுவின் சிறந்த செயல்பாடு மற்றும் சமூக பணிகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாகவும், கவுரவமாகவும் கருதுகிறோம். தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம். தற்போது, கலெக்டரை சந்தித்து, பாராட்டு பெற்றுள்ளோம்.