நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; அமராவதி ஆற்றுப்பாலத்தில் சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்ட எல்லையில், மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இதன் வழியாக தென்மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
பாலத்தின் ரோடு சேதமடைந்தும், செடிகள் முளைத்தும் காணப்படுகின்றன. இதனால், பாலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, அமராவதி ஆற்றுப்பாலத்தை உடனடியாக சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

