ADDED : ஏப் 16, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
உடுமலை: அமராவதி ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவரில் விரிசலை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
பாலத்தில், தடுப்புச்சுவரில் ஆங்காங்கே விரிசலும், செடிகளும் காணப்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாலத்தினை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
