/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சரக்கு லாரி தீப்பிடித்து எரிந்தது
/
சரக்கு லாரி தீப்பிடித்து எரிந்தது
ADDED : நவ 01, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: பெருமாநல்லுார் அருகே குன்னத்துார் ரோட்டில், ஈரோட்டில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் முன் பக்கத்தில் திடீரென தீப்பிடித்தது.
இதனை கவனித்த டிரைவர் கிருஷ்ணன், உடனடியாக, லாரியை நிறுத்தி தப்பித்தார். இதுகுறித்து அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து சென்ற அவிநாசி தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. பெருமாநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

