ADDED : செப் 20, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்வர் சிவகாமி, 60. தனியாக வசித்து வருகிறார். நேற்று மதியம்பைக்கில் வந்த இருவர் வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். இதனை நம்பிய சிவகாமி, வெள்ளி மற்றும் கவரிங் நகைகளை கொடுத்தார். அதன்பின், அவர் அணிந்திருந்த தங்க செயினையும் நைசாக பேசி பாலீஷ் போட்டு தருவதாக கூறி வாங்கி உள்ளனர்.
அப்போது அருகில் வசிக்கும் கிருஷ்ணவேணி வரவே, செயினுக்கு பாலீஷ் போட சுடு தண்ணீர் கேட்டுள்ளனர். அவரும் செல்லவே, சிவகாமியிடம் இருந்து வாங்கிய ஆறு சவரன் தங்க செயினுடன் மர்ம நபர்கள் இருவரும் தப்பினர். புகாரின் பேரில், சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.