/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலையில் தேர்த்திருவிழா துவங்கியது
/
சிவன்மலையில் தேர்த்திருவிழா துவங்கியது
ADDED : பிப் 03, 2025 03:56 AM
திருப்பூர் : சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில், மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கும்.
நேற்று, வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றம் நடந்தது. இன்று அபிேஷக பூஜை நடக்கிறது. வரும், 5ம் தேதி காலை, அம்மன் மலைக்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
விநாயகர் வழிபாட்டுடன் தேர்த்திருவிழா கொடியேற்றம், 5ம் தேதி மதியம் 12:00 மணிக்கு நடைபெற உள்ளது. மாலையில், சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, சுவாமி அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார். தினமும் காலை, மாலை சிறப்பு பூஜையும், சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும், 11ம் தேதி மாலை தேர் வடம் பிடித்து, தேரோட்டம் துவக்கி வைக்கப்படும்; தொடர்ந்து, 12, 13ம் தேதிகளில் தேரோட்டம் நடந்து, அன்று இரவு தேர் நிலைக்கு வந்தடையும். தொடர்ந்து சிறப்பு அபிேஷக பூஜைகள், பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம், மகா தரிசனம் நடைபெற உள்ளது.
n விராலிக்காடு சென்னியாண்டர் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கிராம சாந்தி நேற்று நடந்தது; இன்று காலை, 9:45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. சிறப்பு பூஜை, சுவாமி திருவீதியுலா காட்சிகள் தினமும் நடக்கிறது. வரும், 10 ம் தேதி சுவாமி திருக்கல்யாணமும், 11ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. வரும் 12 ம் தேதி பரிவேட்டை மற்றும் குதிரை வாகன காட்சியும், 13ம் தேதி மகா தரிசனமும் நடைபெற உள்ளது.
n மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழா, 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை கிராம சாந்தியும், காலை மற்றும் மாலை ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருவீதியுலாவும், 9ம் தேதி மயில்வாகன காட்சியும், 10ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன காட்சியும் நடக்கிறது. வரும், 11ம் தேதி மாலை, 3:00 மணிக்கு,ஸ்ரீவிநாயகர் மற்றும் ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி தேரோட்டம் நடக்க உள்ளது. பரிவேட்டை, 12ம் தேதியும், மகா தரிசனம் மற்றும் அன்னதானம், 13ம் தேதியும், மஞ்சள்நீர் விழா 14ம் தேதியும் நடைபெற உள்ளது.
கதித்த மலை வெற்றிவேலாயுதசாமி கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில்களிலும், தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.