/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் களைகட்டுது! 'கலெக்ஷன், கமிஷன்' கலாசாரத்துக்கு கடிவாளம் போடுமா?
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் களைகட்டுது! 'கலெக்ஷன், கமிஷன்' கலாசாரத்துக்கு கடிவாளம் போடுமா?
'மக்களுடன் முதல்வர்' முகாம் களைகட்டுது! 'கலெக்ஷன், கமிஷன்' கலாசாரத்துக்கு கடிவாளம் போடுமா?
'மக்களுடன் முதல்வர்' முகாம் களைகட்டுது! 'கலெக்ஷன், கமிஷன்' கலாசாரத்துக்கு கடிவாளம் போடுமா?
ADDED : ஜன 04, 2024 12:23 AM
திருப்பூர், : 'நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடத்தப்பட்டு வரும், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு, 30 நாளுக்கு கட்டாயம் தீர்வு வழங்கப்பட வேண்டும்' என்ற நிலையில் கமிஷன், லஞ்சம் பெறுவது தவிர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
வார்டு வாரியாக மனுக்கள் பெறப்படும் நிலையில், புதிய குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, சாலை, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பலரும் மனு வழங்குகின்றனர். 'மக்களுடன் முதல்வர்' முகாம், பல இடங்களில் களைகட்டுகிறது.
மேலும், வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஜாதி, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, பட்டா பெயர் மாற்றம், முதியோர், ஆதரவற்றோர், விதவை பென்ஷன் உள்ளிட்ட பிற அரசு திட்டப்பயன் சார்ந்த மனுக்கள் வழங்குகின்றனர்.
அதே நேரம், இதுபோன்ற சேவைகள் சார்ந்து ஏற்கனவே, இ-சேவை மையங்களில் விண்ணப்பித்தவர்களும், அதற்கான ஒப்புகை சான்றை இம்முகாமில் வழங்கும் போது, அந்த மனுக்கள் மீதும், 30 நாளுக்குள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற நடைமுறைக்குள் வந்துவிடுகிறது.
அதிருப்திக்கும் வாய்ப்பு
அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வருவாய்த்துறை சார்ந்த மக்களுக்கு தேவையான அனைத்து வகை சான்றுகளையும், 'ஆன்லைன்' வழியாக விணணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில், கையொப்பமிடும் அதிகாரிகளுக்கு, கமிஷன், லஞ்சம் கொடுத்தால் தான், சான்றிதழ் கைக்கு கிடைக்கிறது என்ற புகார் பரவலாக உள்ளது.
அதேபோல், குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு பெற்றுத்தர, அப்பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் பலர், 25 ஆயிரம் ரூபாய் வரை 'கமிஷன்' பெறுகின்றனர் என்ற புகார் கூட உள்ளது. சில இடங்களில் அந்தந்த உள்ளாட்சிகளில் பணிபுரியும் குடிநீர் பணியாளர்கள் கூட இடைத்தரகர் போன்ற செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த முகாமில் வழங்கப்படும் மனுக்களுக்கு, 30 நாளில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில், மக்கள் யாருக்கும் கமிஷன், லஞ்சம் கொடுக்காமல், நேரடியாக முகாமில் விண்ணப்பித்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தி, தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதேநேரம், 30 நாளுக்குள், மனுக்கள் மீது தீர்வு கிடைக்காத பட்சத்தில், பொதுமக்களின் அதிருப்தியையும், அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.