/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டத்துக்காளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி 'ஜரூர்'
/
கொண்டத்துக்காளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி 'ஜரூர்'
கொண்டத்துக்காளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி 'ஜரூர்'
கொண்டத்துக்காளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி 'ஜரூர்'
ADDED : ஜூலை 24, 2025 11:36 PM

பெருமாநல்லுார்; பெருமாநல்லுாரிலுள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில், ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இக்கோவில், திருப்பூர் மட்டுமின்றி, ஈரோடு மாவட்ட பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. கோவிலை புனரமைப்பு செய்து, புதுப்பிக்க பக்தர்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையொட்டி, 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், 6.34 கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பக்தி மண்டபம், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வசந்த மண்டபம் ஆகியன உபயதாரர்கள் நன்கொடை வாயிலாக புனரமைத்து கொள்ள அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
மேலும், இத்திருப்பணிகளுக்காக அறநிலையத்துறை சார்பில், 6 கோடியே 34 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனையொட்டி, முதல் கட்டமாக, 66 அடி உயரத்தில், 43க்கு 23 அடி அகலம் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் கட்ட கால்கோள் விழா கடந்த மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, ராஜகோபுரம் கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது. ஒரு ஆண்டுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.