/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சூப்பர் மார்க்கெட்டுக்கு வழிகாட்டி கூட்டுறவு பண்டகசாலை தான்'
/
'சூப்பர் மார்க்கெட்டுக்கு வழிகாட்டி கூட்டுறவு பண்டகசாலை தான்'
'சூப்பர் மார்க்கெட்டுக்கு வழிகாட்டி கூட்டுறவு பண்டகசாலை தான்'
'சூப்பர் மார்க்கெட்டுக்கு வழிகாட்டி கூட்டுறவு பண்டகசாலை தான்'
ADDED : நவ 19, 2024 06:26 AM

திருப்பூர்; கூட்டுறவு வார விழாவின் ஒருபகுதியாக, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், 'கூட்டுறவுகளிடையே ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் வலுப்படுத்துதல்' எனும் தலைப்பில், கூட்டுறவுத்துறை கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். கல்லுாரி தாளாளர், வீட்டு வசதித்துறை கோவை மண்டல துணைப்பதிவாளர் அர்த்தனாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். திருப்பூர் சரக கூட்டுறவு சங்கங்களில் துணைப்பதிவாளர்கள் தமிழ்செல்வன், தேவி ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி பேசியதாவது:
எல்லாத்தரப்பு மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், நாட்டிலேயே முதல்முறையாக 1904ல் தமிழகத்தில், திருவள்ளூரில் 'திரூர் பேக்ஸ்' எனும் பெயரில் தான் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது. கூட்டுறவின் வழிகாட்டுதல் அனைவருக்கும் சென்று சேர, உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க கூட்டுறவு வார விழா நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு சேவை செய்யவே கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டது. கைத்தறி நெசவு தொழில், பால் உற்பத்தி தொழில் மேம்பட தற்போதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பேருதவியாக இருந்து வருகிறது. இன்று சூப்பர் மார்க்கெட்டுகள் நம் கண்களுக்கு பளிச்சிட்டாலும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முதலில் வழிகாட்டியது, கூட்டுறவுத்துறை தான். தங்கள் உறுப்பினர்கள் தேவையான பொருட்களை வாங்கி கொள்ள பண்டக சாலைகள் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.