தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாக்கு எண்ணிக்கை மையம் தயாராகிறது

 வாக்கு எண்ணிக்கை மையம் தயாராகிறது

 வாக்கு எண்ணிக்கை மையம் தயாராகிறது


ADDED : ஏப் 09, 2026 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 09:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லுாரியில், 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2009ல் திருப்பூர் மாவட்டம் உருவான பிறகு நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் கோபி கலைக் கல்லுாரியில் நடந்தது. கடந்த 2011 முதல் தற்போது வரை அனைத்து லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கும் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள எல்.ஆர்.ஜி. கல்லுாரியே மையமாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது 4-வது முறையாக சட்டசபை தேர்தலைச் சந்திக்கும் நிலையில், இந்த முறையும் இங்கேயே மையம் அமைகிறது.

மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 தொகுதிகளில் மொத்தம் 2,822 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் 23-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்க தொகுதி வாரியாக தனித்தனி 'ஸ்ட்ராங் ரூம்'கள் தயார் செய்யப்படுகின்றன. இதற்காக வகுப்பறை சுவர்கள் இடிக்கப்பட்டு, ஜன்னல்கள் இரும்புத் தடுப்புகள் மற்றும் மரப்பலகைகளால் காற்று புகாதவாறு அடைக்கப்படுகின்றன.

தபால் ஓட்டுகளை எண்ண தனி டேபிள்கள், மீடியா அறை மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கான தனி வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. பணிகள் முடிந்ததும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் இங்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்படும். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

---

தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. கல்லுாரியில், வகுப்பறை கட்டட வராண்டாவில் உள்ள ஜன்னல்கள் பலகை கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us