நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கொடியேற்று விழா, பொங்கல் விழா மற்றும் மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி படத்திறப்பு விழா என முப்பெரும் விழா தாராபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். தாராபுரம் வட்டார செயலாளர் மயில்சாமி வரவேற்றார். மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில தலைவர் செல்லமுத்து ஏர் கொடியேற்றி வைத்து பேசினார்.
சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தி அமராவதி திட்டத்திலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும். மக்காச்சோளத்துக்கு குவின்டால், 4 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.