sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாரம் ஒரு வார்டு: சங்கிலிப்பள்ளம் ஓடையால் காத்திக்குது ஆபத்து!

/

வாரம் ஒரு வார்டு: சங்கிலிப்பள்ளம் ஓடையால் காத்திக்குது ஆபத்து!

வாரம் ஒரு வார்டு: சங்கிலிப்பள்ளம் ஓடையால் காத்திக்குது ஆபத்து!

வாரம் ஒரு வார்டு: சங்கிலிப்பள்ளம் ஓடையால் காத்திக்குது ஆபத்து!


ADDED : மே 17, 2025 01:26 AM

Google News

ADDED : மே 17, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் நகரின் இதயப்பகுதியான மத்திய பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டி அமைந்துள்ளது, 51வது வார்டு. ஷெரீப் காலனி, அரண்மனைப்புதுார், எம்.ஜி., புதுார், தட்டான்தோட்டம், குறிஞ்சி நகர் பிரதான பகுதிகளாக உள்ளன. வார்டில் அதிகளவு மக்கள் வசிக்கும் வீதியாக ஷெரீப் காலனி விரிவு, எக்ஸ்டன்சன் பகுதிகள் உள்ளது. இங்கிருந்து ஆர்.வி.இ., லே-அவுட், காட்டுளவு, குப்பாண்டம்பாளையம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தார் ஒருபுறம் இருந்தாலும், சாலையில் குழிகள் நிறைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

மழைநீர் தேக்கம்

குறிஞ்சி நகர் - அரண்மனைப்புதுார் ரோட்டில் முற்றிலும் தார் பெயர்ந்து, ஜல்லி, மண்குவியல் மட்டுமே ரோட்டில் உள்ளது. மழை பெய்தால் வாய்க்கால்தோட்டம் பகுதியில் மழைநீர் அதிகளவில் தேங்குவது வாடிக்கை. மழை பெய்தால் மழைநீர் வழிந்தோட வழியில்லை. புதுத்தோட்டம் - ஷெரீப் காலனி மெயின் வீதி - குங்கும மாரியம்மன் கோவில் வீதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், புதிய ரோடு விரிவாக்கம் செய்து நடைபாதையுடன் போடப்பட்டது. ஆனால், பாதசாரிகள் நடக்க வேண்டிய பாதையில், வாகனங்கள் நிறுத்துவதும், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து நிறுத்துவதும் தொடர்கிறது. பல்லடம் ரோட்டில் இருந்து மூன்றடிக்கு தாழ்வான பகுதியாக தட்டான்தோட்டம் உள்ளது. மழை பெய்தால், மழைநீர் பெருக்கெடுக்கிறது. சாக்கடை அடைப்பு, இடிந்துள்ள சாக்கடை கால்வாய்களால் மழைநீர் கழிவுநீர் கலந்து ரோட்டில் செல்கிறது.

குழாய் மாற்றம்

திருப்பூர் நகராட்சி உருவாகும் முன் அமைக்கப்பட்ட, முதல் குடிநீர் திட்ட குழாய் சில இடங்களில் இன்னமும் இருக்கிறது. கூடுதல் பாரத்துடன் வாகனங்கள் ஏறி, இறங்கும் போது அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாவது தொடர்கிறது. குறிப்பாக எம்.ஜி., புதுார், விநாயகர் கோவில் பின் வீதியில் சேதமாகியுள்ள பழைய குழாய்களை மாற்றி புதுக்குழாய் பொருத்த வேண்டும். வார்டில், ஏழு முதல் ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்பட்ட குடிநீர் நான்காவது குடிநீர் திட்டத்தின் பயனாய், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு நீங்கியுள்ளது.

துார்வாருவது எப்போது?

வார்டில், ஒரு கி.மீ., துாரம் சங்கிலி பள்ளம் ஓடை பயணிக்கிறது. தென்மேற்கு பருவமழை துவங்கும் முன், ஓடையின் இருபுறமும் துர்வார வேண்டும்; நீர்வழியை மீட்டெடுக்க வேண்டும். ஷெரீப் காலனி விரிவு பகுதியை அடுத்துள்ளது நேதாஜி நகர், புதுக்காட்டுத்தோட்டம். ஓடையை ஒட்டி ஏாளமான நிறைய வீடுகள் உள்ளன. இவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, அப்புறப்படுத்த வேண்டும். திடீர் மழை வெள்ளம் பெருக்கெடுத்தால் ஆபத்து காத்திருக்கிறது. தட்டான்தோட்டம், ஏ.பி.டி., ரோடு சந்திப்பு இடையே நொய்யலை நோக்கி செல்லும் ஓடையில், இறைச்சி கழிவுகளும், குப்பைகளும், வீணாகும் காய்கறிகளும் வீசியெறிப்படுகிறது. மாநகராட்சி மூலம் அவ்வப்போது கண்காணித்து, அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'பேரிகார்டு' வையுங்கள்

பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு இரண்டையும் இணைக்கும் பிரதான பகுதி ெஷரீப் காலனி, குறிஞ்சிநகர் விரிவு, தட்டான் தோட்டம் பகுதிகள் உள்ளது. நகரின் மத்தியில் உள்ள பகுதி என்பதால், வாகன போக்குவரத்து எக்கச்சக்கம். ஆனால், பாதுகாப்பான பயணம் கேள்வி குறியாக உள்ளது. இணைப்பு சாலைகளில் இருந்து முதன்மை சாலைகளுக்கு வாகனங்கள் செல்லும் போது வேகமாக முன்னேறுவதால், விபத்து அபாயம் உள்ளது. முழுதும் சிமென்ட் சாலை என்பதால், வேகத்தடையும் இல்லை. விபத்து ஏற்படுவதை தவிர்க்க அரண்மனைப்புதுார் பள்ளி, மாகாளியம்மன் கோவில் சந்திப்பு, தட்டான்தோட்டம் வளைவு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் 'பேரிகார்டு' வைத்து, வாகனங்கள் வேகத்தை குறைக்க வேண்டும்.

குப்பைக்கு விடிவு வருமா?

51வது வார்டின் ஒட்டுமொத்த குப்பைகளும் சேகரித்து வைத்து, பெரிய லாரிகளில் எடுத்துச் செல்லும் இடமாக குறிஞ்சிநகர் - அரண்மனைப்புதுார் சந்திப்பு சாலை உள்ளது. ஓடையை ஒட்டி இப்பகுதியில் பத்து லாரி குப்பை ஒரே நேரத்தில் சேர்வதால், துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகரிக்கிறது. காலை, மாலை என இருவேளை மாநகராட்சி வாகனங்கள் குப்பை எடுக்கப்படுகிறது. இருப்பினும், குப்பை தொடர்ந்து சேர்ந்து மலை போல் குவிகிறது. அருகில் உள்ள பொதுக்கழிப்பிடம், தண்ணீர் இல்லாததால், பூட்டப்பட்டுள்ளது; குப்பையுடன், மண் குவிந்து விடுவதால், கழிப்பிடம் மண்ணில் புதைந்து வருகிறது. மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தேவை விழிப்புணர்வு

மாநகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் வசிக்கும் தாராபுரம் ரோடு, டி.எம்.சி., காலனி, பல்லடம் ரோடு டி.எம்.சி., காலனி இந்த வார்டுக்கு உட்பட்டதாக உள்ளது. குப்பைத்தொட்டி நடுரோட்டில் உள்ளது. நெருக்கமான வீடுகளுடன் அதிக மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் இருந்து கொட்டப்படும் குப்பைகள் ஒரு வேளை மட்டுமே அகற்றப்படுகிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் குப்பை நிறைந்து விடுகிறது. மாநகராட்சி பகுதியில், திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நிலை எட்ட முயற்சிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னமும் திறந்த வெளியை மேற்கண்ட பகுதி மக்கள் கழிப்பிடமாக்குவது சுகாதாரம் என்ன விலை என்று கேட்கும் நிலை உள்ளது. டி.எம்.சி., காலனி மக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மேலும் சென்றடைய செய்ய வேண்டும்.

குடிநீர் பிரச்னை இல்லை

குடியிருப்பு பகுதி பிரச்னை குறித்து புகார் தெரிவித்தால், ஒரு வாரத்துக்குள் தீர்க்கப்படுகிறது. மீண்டும் குப்பை எடுத்து விட்டார்கள்; சாக்கடை அள்ளி விட்டார்களா, பிரச்னை தீர்ந்து விட்டதாக என கேட்கிறார்கள். தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது; தொடர் வலியுறுத்தலுக்கு பின், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்குகின்றனர். குப்பை, தெருவிளக்கு பிரச்னை குறித்து புகார் தெரிவித்தால், ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சேதமான சாலைகளை சீரமைத்தால் தடுமாற்றம் இல்லாமல் சென்று வர முடியும்.- பிரகாஷ்குறிஞ்சி நகர்



புதிய சாலைக்கு 'டெண்டர்'

எங்கள் வார்டில் கொட்டும் குப்பைகளையே அகற்ற முடியாத நிலையில், பஸ் ஸ்டாண்ட், பக்கத்து வார்டு குப்பைகளையும், எனது வார்டில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். குப்பை கொட்டுமிடத்தை மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஓடையில் அவ்வப்போது ஒயர்களை போட்டு தீ மூட்டுவதால், ரசாயன புகை போல் வெளியேறுகிறது.இந்த வார்டு மக்கள் புகார் வாசிக்கின்றனர். கழிவுகளை கொட்டியவுடன் ஓடையில் கழிவுகளை கொட்டதவாறு வேலிகளை அமைத்திட வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். தட்டான்தோட்டம், அரண்மனைப்புதுார் உள்ளிட்ட சாலை சேதமாகிய இடங்களில 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ளவும், சாலை இல்லாத இடங்களில் புதிய சாலை அமைக்கவும் டெண்டர் வைக்கப்பட்டுள்ளது; பணி விரைவில் மேற்கொள்ளப்படும். வார்டு மக்களுக்காக இயன்றவரை பணியாற்றியுள்ளேன்.- செந்தில்குமார் (காங்.,)வார்டு கவுன்சிலர்








      Dinamalar
      Follow us