/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாத யாத்திரை பக்தருக்கு காத்திருக்கும் ஆபத்து
/
பாத யாத்திரை பக்தருக்கு காத்திருக்கும் ஆபத்து
ADDED : டிச 20, 2024 03:47 AM

பல்லடம்; பல்லடம், - தாராபுரம் நெடுஞ்சாலை, சமீபத்தில், நான்கு வழிச்சாலையாக புதுப்பிக்கப்பட்டது. இதனுடன் தேவையான இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. கள்ளிப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் படுகுழிகள் உருவாகியுள்ளன. சிமென்ட் சிலாப்கள் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. இது இவ்வழியாகச் செல்லும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீர் நிரம்பி, படுகுழி இருப்பது தெரியாமல், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் நடந்த ரோடு விரிவாக்க பணியின் போதுதான், மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சில நாட்களிலேயே சிமென்ட் சிலாப் உடைந்து படுகுழி உருவாகியுள்ளது. தரமற்ற கட்டுமான பணி இதற்கு காரணமா, அல்லது யாரேனும் சிமென்ட் சிலாப்பை உடைத்து சேதப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. பழனி தைப்பூச விழா நெருங்கி வரும் நிலையில், பக்தர்கள் இவ்வழியாக பாதயாத்திரை செல்வர். விபத்து அபாயம் இருப்பதால், படுகுழியை மூடி நடைபாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.