/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து! பெற்றோர்கள் அச்சம்: அதிகாரிகள் 'அசட்டை'
/
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து! பெற்றோர்கள் அச்சம்: அதிகாரிகள் 'அசட்டை'
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து! பெற்றோர்கள் அச்சம்: அதிகாரிகள் 'அசட்டை'
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து! பெற்றோர்கள் அச்சம்: அதிகாரிகள் 'அசட்டை'
ADDED : மே 07, 2025 08:32 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி தென்னம்பாளையம் அங்கன்வாடி மையம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு கருதி இதை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையம் தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு பின்புறப் பகுதி யில் உள்ளது.
இதில் 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளின் குழந்தைகள் இங்கு படிக்கின்றனர். இந்த மையத்தில் முன்புறம், குழந்தைகளை கவரும் வகையில் வரைபடங்களுடன் அமைந்துள்ளது.
ஆனாலும், அங்கன்வாடி மையத்திற்குள் சுவர் பிளந்தும், மேற்கூரைகள் சேதமடைந்து உடைந்து விழும் நிலையிலும் உள்ளது.
இந்த மையங்களில், 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். காலை 9:00 மணிக்கு இங்கு தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் மீண்டும் மாலை வந்து அவர்களை அழைத்துச் செல்கின்றனர்.
இது தவிர இந்த மையத்துக்கு உட்பட்ட பகுதியினர், ஊட்டச்சத்து மாவு பெறுதல், குழந்தைகளுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து பெறவும் வருகின்றனர்.அவ்வகையில் அதிகப் பயன்பாட்டில் உள்ள மையம், அடிப்படை வசதி இன்றி உள்ளது இதன் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு பிளந்து கிடக்கிறது. இதன் மேற்கூரை சிதிலமடைந்து கீழே உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
பெற்றோர் சிலர் கூறியதாவது:
அங்கன்வாடி மையத்தின் நிலையை பார்த்தால் குழந்தைகளை இங்கு அனுமதிக்கவே அச்சமாக உள்ளது. கல்வியாண்டு துவக்கத்தில் இன்னும் குழந்தைகள் இங்கு வருவர். எனவே, குழந்தைகள் பாதுகாப்பு கருதி இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மையத்தின் பின் கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சுற்றிலும் புதர் மண்டிக்கிடப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.