/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் ஸ்டேஷன் முன் காத்திருக்கும் ஆபத்து
/
போலீஸ் ஸ்டேஷன் முன் காத்திருக்கும் ஆபத்து
ADDED : ஜன 19, 2025 12:31 AM

பல்லடம் : இரும்பு தகடு பழுதானதன் காரணமாக, பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் நுழைவாயிலில், போலீசார், பொதுமக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பல்லடம் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.
புகார் மற்றும் விசாரணைகளுக்காக, ஏராளமான பொதுமக்கள் தினசரி ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷன் நுழைவாயில் முன், கழிவுநீர் கால்வாய் செல்லும் வழியில், இரும்பு தகடு கொண்டு மூடி அமைக்கப்பட்டுள்ளது.
இது சிமெண்ட் பூச்சில் இருந்து பெயர்ந்து தனியாக ஊசலாடி வருகிறது. நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள் இதன்மேல் செல்லும்போது, இரும்பு தகடின் கீழ் உள்ள கழிவு நீர் கால்வாய் கட்டுமானம் சிறிது சிறிதாக சேதமடைந்து வருகிறது.
இதனால், எப்போதும் பெயர்ந்து விடலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது.
இது, போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஏராளமான பொதுமக்கள், போலீசார் வந்து செல்லும் இடம் என்பதால், விபத்து ஏற்படும் முன், இரும்பு தகடை பராமரித்து அமைக்க வேண்டியது அவசியம்.