/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர்வாழும் 'இறந்தவர்கள்' வாக்காளர் பட்டியலில் அவலம்
/
உயிர்வாழும் 'இறந்தவர்கள்' வாக்காளர் பட்டியலில் அவலம்
உயிர்வாழும் 'இறந்தவர்கள்' வாக்காளர் பட்டியலில் அவலம்
உயிர்வாழும் 'இறந்தவர்கள்' வாக்காளர் பட்டியலில் அவலம்
ADDED : டிச 05, 2024 06:20 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், சுருக்கமுறை திருத்தத்துக்கு பின்னரும், இறந்த வாக்காளர் 4 ஆயிரம் பேர் பட்டியலில் தொடரும் நிலையே உள்ளது. இவர்களை நீக்குவதற்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் செவ்வனே மேற்கொள்ளவேண்டும்.
இரட்டை பதிவு மற்றும் இறந்த வாக்காளை நீக்கம் செய்து, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தேர்தல் கமிஷன் முனைப்பு காட்டிவருகிறது.
வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக்டோபர் 29 முதல் நவ. 28 ம் தேதி வரை சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த ஆக., முதல், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,), வாக்காளர்களின் வீடு வீடாக சென்று, இறந்த வாக்காளர்களின் விவரங்களை சேகரித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. பி.எல்.ஓ.,க்களின் கள ஆய்வில், எட்டு தொகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் பேர் இறந்த வாக்காளர்களாக கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டனர்.
சுருக்கமுறை திருத்தத்தில், இறந்த வாக்காளர் பெயர் நீக்கம் செய்வதற்காக, குடும்பத்தினரிடமிருந்து, நேரடியாகவும், ஆன்லைனிலும் படிவம் - 7 பூர்த்தி செய்து பெறப்பட்டது. சுருக்கமுறை திருத்தத்தில், இறந்த வாக்காளர் அனைவரையும் நீக்க விண்ணப்பிக்கப்படவில்லை; பெயர் நீக்கத்துக்கு 12,847 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.
அதாவது, பி.எல்.ஓ.,க்களின் கள ஆய்வில் கண்டறியப்பட்டவர்களிலேயே, இன்னும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த வாக்காளர்கள், பட்டியலில் உயிர்வாழும் நிலையே உள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், பி.எல்.ஓ.,க்கள் நடத்திய கள ஆய்வில், 16 ஆயிரம் இறந்த வாக்காளர் கண்டறியப்பட்டனர். சுருக்கமுறை திருத்தத்தில், அவர்களது பெயர்களை நீக்குவதற்கான முழுமுயற்சி மேற்கொள்ளப்பட்டது; 12,847 பேரின் பெயர் நீக்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இறந்த வாக்காளரை பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்வதற்கு, இறப்பு சான்று கட்டாயமாகிறது. சுருக்கமுறை திருத்தத்தில், நீக்கத்துக்கு விண்ணப்பிக்காததற்கு, இறப்பு சான்று பெறாததும் காரணமாக இருக்கலாம்.