/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்வாரிய அலுவலர் விபரீத முடிவு
/
மின்வாரிய அலுவலர் விபரீத முடிவு
ADDED : ஜூலை 07, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:சேலம்
மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 46;
காங்கேயத்தில் மின்வாரிய குடியிருப்பில் வசித்தார். மின் பாதை
இன்ஸ்பெக்டராக, கிழக்கு வெள்ளக்கோவில் பிரிவு அலுவலகத்தில்
பணிபுரிந்தார்.
இரு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில்
இருந்தார். அதிக குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து
மனைவி கேட்டபோது, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்
அந்தியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு மனைவி சென்று விட்டார்.
குடியிருப்பில் தனியாக இருந்த குமராசாமி நேற்று மாலை,
குடியிருப்புக்கு வெளியே மரத்தில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.