/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி மக்கள் இயக்கமாக மாறணும்!
/
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி மக்கள் இயக்கமாக மாறணும்!
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி மக்கள் இயக்கமாக மாறணும்!
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி மக்கள் இயக்கமாக மாறணும்!
ADDED : அக் 02, 2024 06:37 AM
திருப்பூர்,: ஒரு லட்சிய கிராமத்தை உருவாக்குவது என்பது, எந்த வகையிலும் ஒரு லட்சிய இந்தியாவை உருவாக்குவதை விடச் சளைத்ததல்ல. ஒரு லட்சிய கிராமத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடும் மனிதன், இந்தியாவுக்கு மட்டுமல்ல. இந்த உலகத்துக்கே ஓர் அற்புதமான வழிகாட்டியாக விளங்குவார்'' என்பது காந்தியடிகளின் கருத்து.
ஒரு லட்சிய கிராமங்களின் அடிப்படை தேவை சுகாதாரம்; கிராம ஊராட்சிகளில் இன்றைய சுகாதார நிலை என்ன?
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 95 சதவீத ஊராட்சிகளில், வீடு, கடைகளில் இருந்து சேரிக்கப்படும் குப்பையை கொட்டுவதற்கு கூட இடமில்லை; இதனால், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன; எரியூட்டப்படுகின்றன. இதனால், சுகாதாரகேடு ஏற்படுகிறது.
குப்பைகளை சேகரித்து, மக்கம் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கும் 'திடக்கழிவு மேலாண்மை திட்டம்' என்பது, கிராம ஊராட்சிகளில் பேச்சளவில் கூட இல்லை.
கிராம ஊராட்சிகளில், நுாறு சதவீதம் குடிநீர் வினியோகம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றாலும், பவானி ஆற்றுநீர், சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் இருந்து தான், திருப்பூரில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆனால், 'தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வினியோகம் இல்லை' என்பதும், கிராம ஊராட்சிகளில் உள்ள 'போர்வெல்' நீரையும் வினியோகித்து தான், 'ஜல் ஜீவன்' திட்டம் கணக்கு காண்பிக்கப்படுகிறது என்பதே யதார்த்தம்.
வீடுதோறும் குடிநீர்!'கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டடங்களுக்கு குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து மேல்நிலை தொட்டிகளிலும், 'குளோரின் கலப்பான்' கருவி பொருத்தி, குடிநீரில் 'குளோரின்' கலப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஜல் ஜீவன் இயக்ககத்தின் கீழ், அனைத்து வீடுகளுக்கும், 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சியாக மாற்றி, 'வீடு தோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி' என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி, கிராம ஊராட்சி தலைவரால் அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும்' எனவும், உத்தரவிடப்பட்டுள்ளது.