/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய வீதியில் மதுக்கடையால் தொல்லை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
/
முக்கிய வீதியில் மதுக்கடையால் தொல்லை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
முக்கிய வீதியில் மதுக்கடையால் தொல்லை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
முக்கிய வீதியில் மதுக்கடையால் தொல்லை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
ADDED : பிப் 18, 2024 11:48 PM
உடுமலை:'உடுமலை நகரில், அரசு அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து நிறைந்த ரோட்டில், செயல்படும் 'டாஸ்மாக்' மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும்,' என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை நகரம், பசுபதி வீதியில், நகர கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உட்பட அரசு அலுவலகங்களும், வணிகக்கடைகளும் அதிகளவு உள்ளன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த தளி ரோட்டிலிருந்து பிரியும் இந்த வீதியில், காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் மிகுந்து இருக்கும்.
இந்நிலையில், நகர கூட்டுறவு வங்கி எதிரில், 'டாஸ்மாக்' மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால், ஏற்கனவே, நெரிசலில் சிக்கி தவிக்கும் வீதியில், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாகியுள்ளது.
குறிப்பாக, கடைக்கு வரும் 'குடி'மகன்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதுடன், இரவு நேரங்களில், அரசு அலுவலகங்கள் முன் தஞ்சமடைகின்றனர்.
இதனால், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் அவ்வழியாக செல்ல முடிவதில்லை. பாதுகாப்பு கருதி, பசுபதி வீதியை தவிர்த்து, அனைத்து வாகனங்களும் தளி ரோட்டில் செல்ல முயற்சிக்கும் போது, அப்பகுதியில், விபத்துகள் ஏற்படுகின்றன.
கூட்டுறவு வங்கிக்கு வரும் மக்கள், எதிரேயுள்ள மதுக்கடையால், அச்சத்திற்குள்ளாகின்றனர். பிளாஸ்டிக் உட்பட அனைத்து கழிவுகளும் அப்பகுதி முழுவதும் வீசப்படுகிறது.
இது குறித்து தன்னார்வ அமைப்புகள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு, பல முறை புகார் மனு அனுப்பினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மக்கள் கூறுகையில், 'பசுபதி வீதியிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை உடனடியாக இடம் மாற்ற வேண்டும். இக்கடையால், நகரின் மையப்பகுதியில், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பாதித்து வருகிறது. அருகிலுள்ள குடியிருப்பு மக்கள், அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இது குறித்து ஆய்வு நடத்தி மதுக்கடையை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை', என்றனர்.

