/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாடகம் என்றாலும்... நெஞ்சம் பதைபதைக்கிறது! இப்படி ஒரு துயரம் எப்போதும் நடக்கக் கூடாது
/
நாடகம் என்றாலும்... நெஞ்சம் பதைபதைக்கிறது! இப்படி ஒரு துயரம் எப்போதும் நடக்கக் கூடாது
நாடகம் என்றாலும்... நெஞ்சம் பதைபதைக்கிறது! இப்படி ஒரு துயரம் எப்போதும் நடக்கக் கூடாது
நாடகம் என்றாலும்... நெஞ்சம் பதைபதைக்கிறது! இப்படி ஒரு துயரம் எப்போதும் நடக்கக் கூடாது
ADDED : ஜன 30, 2024 12:06 AM
திருப்பூர்;திருப்பூர் - பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் மார்க்கெட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர், நேற்று இரண்டு டூவீலர்களில் வந்து காய்கறி வாங்கினர்.
காய்கறி வாங்கி கொண்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகுந்து அதிவேகமாக சென்றுகொண்டிருந்தனர். குறைகேட்பு கூட்ட அரங்கம் அருகே திரும்ப முயன்றபோது, எதிரேவந்த வேன் மீது, இரண்டு டூவீலர்களும் அதிபயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில், ரத்தம் வெள்ளத்தில், நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சாலை முழுவதும் காய்கறிகள் சிதறிக்கிடந்தன. இறந்தவர்கள் உடலைப்பார்த்து, ஐயோ… எங்களை விட்டு போய்ட்டீங்களே… என கதறி அழுதனர்.
டூவீலரில் அதிவேகம், குடிபோதையில் பயணம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாததே, உயிர் பலி விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. அழுகுரல் சத்தம்கேட்டு, பதறிய மக்கள், விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்து, கூடினர். கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் போலீசாரும், விபத்து பகுதியை பார்வையிட்டனர்.
அப்போது, 'டக்… டக்… டக்' என மைக் தட்டப்பட்டது. பெண் ஒருவர் பேசத்துவங்கினார். 'மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நாடகம் தான் இது.
சென்னை கூத்துப்பட்டறை தலைவர் முத்துசாமி மற்றும் மாணவர் குழுவினர், சாலை விபத்து; அதனால் குடும்பத்தினர் சந்திக்கும் இழப்பு குறித்து நடித்து காட்டினர்,' என்றார். 'அப்பாடா… இது நாடகம் தான்' என சுற்றியிருந்த மக்கள், பெருமூச்சுவிட்டனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம்,'ஹெல்மெட்' அணியவேண்டும்; கார் ஓட்டும்போது, சீட்பெல்ட் அணியவேண்டும். குடிபோதையில், மொபைல் போனில் பேசிக்கொண்டு, அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாலை விபத்துகளால், உயிர் பலி மட்டுமின்றி கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்களை இழந்து ஆயுள் முழுவதும் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது.
குடும்பத்துக்கு ஆதாரமாக உள்ள நபரை இழந்து, அந்த குடும்ப உறுப்பினர்கள் பரிதவிக்க நேரிடுகிறது.