ADDED : செப் 11, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், செப். 12–
தேர்தல் நடக்கும் போது, ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் அனைத்துவகை பொருட்களையும் தேர்தல் கமிஷன் வழங்குகிறது.
அவ்வகையில், தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பல்வேறுவகை படிவங்கள் உள்பட தேர்தல் பொருட்கள் நேற்று, சென்னையிலுள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தன. அவை மாவட்ட தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் சரிபார்க்கப்பட்டு, தாராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
