/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளிக்கு பின்னும் குறையாத பரபரப்பு
/
தீபாவளிக்கு பின்னும் குறையாத பரபரப்பு
ADDED : நவ 03, 2024 11:13 PM

திருப்பூர்; தீபாவளி பண்டிகை நாளன்றும், பண்டிகைக்கு அடுத்த நாட்களிலும், திருப்பூரில் குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகளில், இருசக்கர, நான்கு சக்கர வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
கடைகள் வழக்கம்போல் இயங்க வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சாலையோர கடைகளிலும், துணி, பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.
பின்னலாடை உற்பத்தி துறையினர் கூறுகையில், ''வெளிமாவட்ட தொழிலாளர்கள் பலர், திருப்பூரிலேயே சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் வசிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொங்கலுக்கு மட்டும் சொந்த ஊர் செல்வது; தீபாவளியை திருப்பூரிலேயே கொண்டாடுவது என்கிற மனநிலை மாற்றம் தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கல்வி, போக்குவரத்து மற்றும் இதர செலவினங்களையும் கருத்தில் கொள்கின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள், பெரும்பாலும் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதில்லை. அதனாலேயே, தீபாவளி பண்டிகை நாட்களிலும், திருப்பூர் இயல்பான பரபரப்பு குறையாமல் காணப்படுகிறது'' என்றனர்.