/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சரியும் சாலை... எரியாத விளக்கு... ஓயாத பிரச்னை!
/
சரியும் சாலை... எரியாத விளக்கு... ஓயாத பிரச்னை!
ADDED : ஜன 09, 2024 12:36 AM

நாய்த் தொல்லை
திருப்பூர், 15 வேலம்பாளையம், சொர்ணபுரி எக்ஸ்டென்ஷன் இரண்டாவது வீதியில், தெரு நாய்த் தொல்லை அதிகமாக உள்ளது.
- முத்துவேல், 15 வேலம்பாளையம்.
திருப்பூர், 58வது வார்டு, கந்தசாமி செட்டியார் வீதியில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகிறது. மாநகராட்சி மூலம் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- ராஜலிங்கம், கந்தசாமி செட்டியார் வீதி. (படம் உண்டு)
சாயும் அபாயம்
திருப்பூர் பி.என்.ரோடு., போயம்பாளையம் ஸ்டாப், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே விழும் நிலையில் சாய்ந்தபடி மின்கம்பம் உள்ளது.
- முபாரக் பாட்ஷா, போயம்பாளையம்.
தார் சாலை அவசியம்
திருப்பூர், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை கற்கள் நிறைந்து, மண் நிறைந்துள்ளது. தார் ரோடு போட வேண்டும்.
- சரவணன், ஈட்டிவீரம்பாளையம். (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பஸ் ஸ்டாப் எதிரில், ஓட்டல் கடை முன் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- முத்துக்குமார், இந்திரா நகர். (படம் உண்டு)
திருப்பூர், 54வது வார்டு, வீரபாண்டி, அமராவதிநகர் விரிவு முதல் வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பாதசாரிகள் சென்று வர சிரமாக உள்ளது.
- பாரதிராஜா, அமராவதி நகர். (படம் உண்டு)
நடக்க வழியில்லை
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, ரேவதி தியேட்டர் ரோட்டில் மூன்று முறை குழி தோண்டி விட்டனர். எதற்காக, என்ன பணி நடக்கிறது என்பது தெரியவில்லை. வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் நடக்க வழியில்லை.
- ஹரிஷ், மண்ணரை. (படம் உண்டு)
எரியாத விளக்கு...
திருப்பூர், கூலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் மீது தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள்சூழ்ந்து இருப்பதால், அவ்வழியாக செல்வோருக்கு திருட்டு பயம் உள்ளது.
- முருகேசன், கூலிபாளையம். (படம் உண்டு)
திருப்பூர், 32வது வார்டு, சஞ்சய் நகர் - கணேசபுரம் சந்திப்பு வீதியில், பத்து நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- பெரியசாமி, சஞ்சய் நகர். (படம் உண்டு)
'சிலாப்' கல் போடுங்க!
திருப்பூர், காங்கயம் ரோடு, சுகுமார் நகர், சாந்த மாரியம்மன் கோவில் முதல் வீதியில் தரைப்பாலம் அருகே கால்வாய் உடைந்து நடக்க வழியில்லாமல் உள்ளது. சிலாப் கல் போட்டுத் தர மாநகராட்சி முன் வர வேண்டும்.
- அருணாசலம், சுகுமார்நகர். (படம் உண்டு)
குப்பை தேக்கம்
திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம், அம்மணியம்மாள் லே-அவுட்டில் சாலை முழுதும் குப்பை தேங்கியுள்ளது. குப்பை அள்ள வேண்டும்.
- விக்னேஷ், அம்மணியம்மாள் லே-அவுட். (படம் உண்டு)
சரியும் சாலை
அவிநாசி, ராக்கியபாளையம் - மங்கலம் இணைப்பு சாலை, உமையஞ்செட்டிபாளையத்தில் சாலை சரிந்து வருகிறது. வாகன ஓட்டிகள் தவறி விழும் முன் சரிசெய்திட வேண்டும்.
- சண்முகசுந்தரம், உமையஞ்செட்டிபாளையம். (படம் உண்டு)