/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதைகள் ரக கலப்பில் விவசாயிக்கு கவனம் தேவை!
/
விதைகள் ரக கலப்பில் விவசாயிக்கு கவனம் தேவை!
ADDED : செப் 27, 2024 11:28 PM
பல்லடம்: பல்லடம் வேளாண் அலுவலர் வளர்மதி கூறியதாவது:
நல் வித்தே நல் விளைச்சலுக்கு ஆதாரம் என்பார்கள். விதைகளை விவசாயத்தின் மூலதனமாக உள்ளது. விதைகள் தரமானவையாக இருக்க வேண்டும். ஒரே ரக விதைகள் ஒரே சமயத்தில் வளர்ச்சியடைந்து, பூத்து பழுதின்றி அதிக மகசூல் கொடுக்கிறது.
விதைப்புக்கு பயன்படுத்தப்படும் விதைகளில், பிற ரக கலப்பு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால், அடுத்த பருவத்தில் பயன்படுத்தும் போது, பூக்கும் பருவம், பயிர்களின் உயரம், அறுவடை காலம் ஆகியவை மாறுபடும். பிற ரகம் கலந்த விதைகளை விதைப்பதால், நோய் தடுப்பு, செலவு அதிகரிப்பதுடன், விதைகளின் தரத்துடன், நிகர மகசூல் குறையும்.
ஒரே ரக விதைகள் விளைவதற்கு ஏற்றது. பிற ரக விதைகள் கலந்து இருந்தால், விதைகளின் பாரம்பரிய சுத்தம் பாதிக்கப்படும். கலப்பு விதைகளை பார்த்து, பிரித்து அகற்றுவதால் மகசூல் மற்றும் தரத்தை அதிகரிக்கலாம்.
விதைகளில், பிற ரகங்கள் கலந்துள்ளதா என்பதை நுண்ணோக்கி மூலம் கண்காணித்து, ரகங்களின் குண நலன்களை கருத்தில் கொண்டு கலப்பு ரகங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. எனவே, விதை குவியலை பெரும் விவசாயிகள், விதை மாதிரிகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிக மகசூல் பெற, விதை பரிசோதனை மிக அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.