/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துார்வாரிய மண் மீண்டும் சங்கமம்
/
துார்வாரிய மண் மீண்டும் சங்கமம்
ADDED : ஜூன் 22, 2025 11:34 PM

திருப்பூர்: திருப்பூர் நகர எல்லையை கடந்து செல்லும் நொய்யல் ஆறு பல இடங்களில் மாசுபட்டிருக்கிறது.
ஆற்றோரங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், ஓட்டல் மற்றும்இறைச்சிக் கடை கழிவுகள், ஆற்றில் கொட்டப்படுகின்றன. இதனால், ஆற்று நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
மாநகராட்சி எல்லையில், நொய்யல் ஆற்றில் சுகாதாரம் காக்க, மாநகராட்சி சார்பில் தடுப்பு வேலி அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், மங்கலம் ரோடு, ஆண்டிப்பாளையம் வழியாக வரும் நொய்யல் ஆற்று நீர், செந்தில் நகரில் உள்ள குட்டையில் தேங்கி, சேனாப்பள்ளம் ஓடையின் வழியாக வெளியேறுகிறது.
ஓடையின் பல இடங்களில், துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.இருப்பினும், துார்வாரப்பட்ட கழிவுகள், மண் உள்ளிட்டவை ஆற்றுப்படுகையிலேயே கொட்டப்படுகின்றன.
மழையின் போது, மீண்டும் அவை ஆற்றுக்குள்ளேயே அடித்து செல்லப்பட்டு விழுகின்றன. இதனால், துார் வாரும் பணியின் நோக்கம் வீணாவதுடன், மக்கள் வரிப்பணமும் விரயமாகிறது.
ஜம்மனை பள்ளம் ஓடையின் பல இடங்கள் புதர்மண்டி, நீர்வழித்தடம் அடைப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.