/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா
/
கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா
ADDED : மார் 21, 2025 01:59 AM

அனுப்பர்பாளையம்,: பெருமாநல்லுாரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா அடுத்த மாதம், 2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஏப்., 8ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடக்கிறது. திருப்பூர், அவிநாசி, குன்னத்துார், நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இவ்வாறு அதிகளவு பக்தர்கள் வந்து செல்வதால், உரிய வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோவில் உள் வளாகத்திலும், நுழைவு வாயில் பகுதியில் முதல் கோவில் முன் பகுதிவரை பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கோவில் வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி, 40 இடங்களில் மொபைல் டாய்லெட் அமைத்தல், 70 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், நீர் மோர் பந்தல் அமைத்தல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பக்தர்கள் வரிசையாக சென்று குண்டம் இறங்க தடுப்பு அமைத்தல், குண்டம் இறங்குபவர்கள் மற்றும் பக்தர்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.