/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமும் குப்பை வண்டி வரவேண்டும்'
/
'தினமும் குப்பை வண்டி வரவேண்டும்'
ADDED : டிச 31, 2024 05:00 AM
திருப்பூர் : திருப்பூர், பெருமாள் கோவில் வீதி அருகே பூ மார்க்கெட் செயல்படுகிறது. மொத்தமுள்ள, 83 கடைகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் வந்து குவிகிறது.
வழக்கமான நாட்களில், 1.50 டன் விசேஷ நாட்களில், 2.50 டன் பூ வருகிறது. கட்டி விற்பனைக்கு தயார்படுத்திய பூக்கள் போக மீதமாகும், அழுகும் பூக்களை வியாபாரிகள் மார்க்கெட் பின்புறம் ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டுகின்றனர்.
ஆனால், மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குப்பைகளை அகற்றுகின்றனர். இதனால், அதிகளவில் குப்பைகள் தேக்கமாகிறது.
வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல், பார்க்கிங் பிரச்னை ஏற்படுகிறது. மழை பெய்து விட்டால் அழுகிய பூக்களில் இருந்து, துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து, நேற்று தினசரி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சுலைமான் தலைமையில் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து, 'தினமும் குப்பை வண்டி வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்கெட் பின்வீதியில் தெருவிளக்கு எரியாமல் இருப்பது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், இன்னமும் சரிசெய்யவில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்,' என கோரிக்கை மனு அளித்தனர்.