ADDED : ஆக 21, 2025 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-நமது நிருபர் -
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சி மொழி பயிலரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
தேனி தமிழ்ச்சங்க நிறுவனர் இளங்குமரன் பேசுகையில், ''மொழி என்பது வெறும் கருத்துகளை மட்டும் பரிமாறும் ஊடகம் அல்ல. பேசும் மனிதர்களின் உயிர்ப்பு, மொழி. தன்னை யார் என்று இந்த உலகத்துக்கு உணர்த்துவது மொழிதான். உலகின் மூத்த மொழி என்கிற பெருமைக்குரியது, நம் தமிழ் மொழி. உலகெங்கும் ஏழாயிரத்துக்கும் அதிகமான மொழிகள் உள்ளன. இவற்றில், தமிழ் உள்பட ஆறு மொழிகள் மட்டுமே தொன்மையானவை,'' என்றார்.