/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அடைக்கல அம்மன்
/
ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அடைக்கல அம்மன்
ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அடைக்கல அம்மன்
ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அடைக்கல அம்மன்
ADDED : ஆக 15, 2025 09:24 PM

பல்லடம்; திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வதம்பச்சேரி ஊராட்சி, நல்லுார்பாளையம் கிராமத்தில், அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு கைத்தறி நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது, அம்மனுக்கு கைத்தறி புடவை வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையில், அழகு நாச்சியம்மன் அருள்பாலித்து வருகிறார்.
அப்பகுதி பக்தர்கள் சிலர் கூறியதாவது:
நல்லுார்பாளையம் வழியாக வந்த ஆங்கிலேயர் படையினர் சிலர், இங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பித்த பெண்கள், இங்குள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் தஞ்சமடைந்தனர். பெண்களை விரட்டி வந்த ஆங்கிலேயர்களுக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது. தவறை உணர்ந்த அவர்களிடம், அம்மனை வேண்டிக்கொண்டால் நிச்சயம் சரியாகும் என, ஊர் மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பின், அவர்களது பார்வை சரியானது. கோரிக்கை நிறைவேறியதால், ஆங்கிலேய படையினர், கைத்தறி புடவையை அம்மனுக்கு வழங்கி வழிபட்டுச் சென்றதாக வரலாறு கூறுகிறது. பெண்களுக்கு அடைக்கலம் அளித்ததால், அம்மனுக்கு, 'அடைக்கல அம்மன்' என்ற பெயரும் உண்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது, ஆடி மாதத்தில் நடந்ததால், ஒவ்வொரு ஆண்டும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஆங்கிலேயர்கள் வழங்கிய புடவை உடுத்தப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.