ADDED : ஜூலை 24, 2025 12:10 AM

திருப்பூர்; முத்தணம்பாளையம், ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், கருவறை விமானத்துக்கு, நேற்று தங்கக்கவசம் பொருத்தப்பட்டது.
திருப்பூர், முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவில், கும்பாபிேஷகம் நடந்தது; தொடர்ந்து, 48 நாட்களாக மண்டல பூஜை நடந்து வந்தது; இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், அறங்காவலர் குழு உறுப்பினர் 'சுப்ரீம் பேரடைஸ்' ராதாகிருஷ்ணன் சார்பில், கருவறை விமானத்துக்கு தங்க கவசம் பொருத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஹிந்து அறநிலையத்துறை வாயிலாக, முறையான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்று தங்ககவசம் பொருத்தப்பட்டது.
இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பக்தர்கள் உபயமாக வழங்க அனுமதி கேட்டதன் அடிப்படையில், கருவறை விமானத்துக்கு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிேஷகத் தின் போது, ஏற்கனவே தங்க கலசம் பொருத்தப்பட்டது. வரும், ஆக., 8ம் தேதி, தங்க கவசத்துக்கான சிறப்பு பூஜைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, 'என்றனர் .