/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விரிகிறது பசுமைப்பரப்பு சிறக்கிறது சுற்றுச்சூழல்
/
விரிகிறது பசுமைப்பரப்பு சிறக்கிறது சுற்றுச்சூழல்
ADDED : ஜூன் 05, 2025 01:37 AM

'வெற்றி' அறக்கட்டளை சார்பில், பல்வேறு பசுமை அமைப்புகளுடன் கரம் கோர்த்து, திருப்பூர் மாவட்டத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம், நேர்த்தியான திட்டமிடலுடன் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2015ல் துவங்கி, 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக வளர்க்கப்பட்டுள்ளன; 300க்கும் அதிகமான குறுங்காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியத்தில் உள்ள மரக்கன்றுகளுடன், சங்க இலக்கிய பூங்கா, கடம்ப வனம், மாநகராட்சியுடன் இணைந்து மூங்கில் பூங்கா போன்றவை பசுமைப்பணிக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளன. அத்துடன், ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் மரக்கன்று நடும் பணியும் நடந்து வருகிறது.
'---
2 படங்கள்
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம் உருவான பசுமைப்பரப்புகள்.
தெக்கலுார்
பூமலுார்.