/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மைதானம் விளைநிலம்; விளையாட்டு அடியுரம்!
/
மைதானம் விளைநிலம்; விளையாட்டு அடியுரம்!
ADDED : ஆக 12, 2024 11:27 PM

வீதி முழுக்க குட்டீஸ் கூட்டம் நிறைந்திருக்கும். கபடி, பாண்டி என எண்ணிலா விளையாட்டுகள் அரங்கேறும். கலகலப்பு, பரபரப்பு, சலசலப்புக்குப் பஞ்சம் இருக்காது. உடல் முழுக்க, வியர்வை ஊற்றெடுக்கும். அங்கே எல்லோரும் ஓர் இனம்தான். தோழமையுணர்வு வலுக்கும். மைதானங்களாக திகழ்ந்த வீதிகள்தான் விளைநிலம்; வீரம், விவேகம், உடல் திறன், ஒழுக்கம், கட்டுப்பாடு எனப் பல்வேறு பண்புகளை வளர்க்க, விளையாட்டுகள்தான் அடியுரம்.
இவையெல்லாம், அன்றைய யதார்த்தங்கள்; இன்றோ, வீதிகளில் குட்டீைஸப் பார்த்தால், அதுவன்றோ அதிசயம்! வீட்டில், புத்தகமும், கையுமாய் இருந்தால்கூடப் பரவாயில்லை; விரல்களின் லாவகத்தில் மொபைல்போன் திரை படாதபாடு படுகிறது. உடல்நலக்கேடும் பரிசாகக் கிடைக்கிறது.
அடடா... குறுமையப்போட்டிகள், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டுமே...! மாவட்டம் முழுவதும், நேற்று குறுமையப் போட்டிகள் துவங்கின. திருப்பூர்,
பிரன்ட்லைன் அகாடமி பள்ளியில் நடந்த தெற்கு குறுமைய 'கோ-கோ' போட்டியில் பிரன்ட்லைன் - மணி பப்ளிக் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் மோதினர். இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில், வித்யவிகாசினி - சென்சுரி பவுண்டேஷன் பள்ளி மாணவர்கள் விளையாடினர். எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் நடந்த, அவிநாசி குறுமைய 'கேரம்' போட்டியில் மாணவ - மாணவியர் மகிழ்ச்சிததும்ப பங்கேற்றனர்.

