/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தி ேஹம்ஸ்' ஷோரூம் நாளை திறப்பு விழா
/
'தி ேஹம்ஸ்' ஷோரூம் நாளை திறப்பு விழா
ADDED : ஜூலை 27, 2025 02:52 AM
திருப்பூர் : ராயபுரம் பகுதியில் 'தி ேஹம்ஸ்' வெளிநாட்டு பொருட்கள் விற்பனை ேஷாரூம் நாளை திறப்பு விழா நடக்கிறது.
திருப்பூர், ராயபுரம், சூசையாபுரம் விரிவு பகுதியில் உள்ள ஜியோ டவர்ஸ் கட்டடத்தில், 'தி ேஹம்ஸ்' என்ற பெயரிலான ேஷாரூம் திறப்பு விழா மற்றும் இணைய தள துவக்க விழா நாளை (28ம் தேதி) காலை, 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது. 6 ஆயிரம் சதுரடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ேஷாரூமில், இறக்குமதி பொருட்கள், ஸ்டேஷனரிஸ், வீட்டு அலங்கார பொருட்கள், பூஜை பொருட்கள், திருமணம், தீபாவளி போன்ற விசேஷங்களுக்கான பொருட்கள் கிடைக்கும்.
விழாவில், இதன் நிர்வாகிகள் செல்வராஜ், சுரேஷ், மகாலட்சுமி, ஹரி வசந்த், அஜிதா ஹரி ஆகியோர் வரவேற்கின்றனர். கோவை தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை ேஷாரூமை திறந்து வைக்கிறார். தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் முதல் விற்பனையைத் துவங்கி வைக்க, விகாஸ் வித்யாலயா பள்ளி தலைவர் ஆண்டவர் ராமசாமி பெற்றுக் கொள்கிறார்.
சுவி டெக்ஸ் புவனேஸ்வரி செல்வராஜ் குத்து விளக்கேற்றுகிறார். நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

