/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மண் பானை விற்பனை ஜோர்
/
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மண் பானை விற்பனை ஜோர்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மண் பானை விற்பனை ஜோர்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மண் பானை விற்பனை ஜோர்
ADDED : மார் 23, 2026 10:16 PM

உடுமலை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடுமலை சுற்றுப்பகுதியில் மண்பானைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு மழைப்பொழிவு குறைந்ததோடு, நடப்பாண்டு குளிர்கால மழையும் குறைந்துள்ளது. கோடை காலம் முன்னதாகவே துவங்கியுள்ளதோடு, வெயிலின் தாக்கமும் கடுமையாக உயர்ந்துள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது, மண்பானைகள் தான்.
பொருளாதார வசதியில்லாத மக்களும், மண்பானை பயன்படுத்த முடிவதால், இவை ஏழைகளின் 'ஏசி' என அழைக்கப்படுகிறது. இத்தகைய பானைகளுக்கு கோடை காலம் துவங்கி விட்டதால் விற்பனையும் அதிகரித்துள்ளது.
உடுமலையில், பஸ் ஸ்டாண்ட், ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, தளிரோடு உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் விற்கப்படுகிறது. இங்கு, ஒரு பானை, ரூ.250 முதல், 500 வரை, கொள்ளளவுக்கு ஏற்றபடி விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு வடிவங்களில் மண் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளதோடு, பானைகளிலும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட ஜக்குகள், குவளைகள் என பலவிதமான வடிவங்களிலும் உள்ளன.
மடத்துக்குளம், கணியூர், கணக்கம்பாளையம், பூளவாடி, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பானைகள் மொத்தமாக பெறப்பட்டு, இங்கு சந்தைப்படுத்தப்படுகின்றன.
கோடை காலத்தை சமாளிக்கவும், இயற்கையான முறையில், குளிர்ந்த நீர் பருகவும், வீடுகள், வணிக நிறுவனங்கள் என, பொதுமக்களும், மண் பானைகளை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதால், விற்பனை அதிகரித்துள்ளது.

