/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
' தீரா' பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்
/
' தீரா' பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்
ADDED : செப் 18, 2024 10:54 PM
திருப்பூர்: திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது:
திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தியில், 150 முதல், 200 நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. நிட்டிங், ஓவன் என இருவகை எலாஸ்டிக் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. நேரடி, மறைமுகமாக, 5,000 முதல், 7,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு, பின்னலாடை உற்பத்தியில், 20 சதவீதம் எலாஸ்டிக் தேவை இருக்கிறது.
பாலியஸ்டர், நுால் ரப்பர் போன்ற மூலப்பொருட்கள் கொள்முதல் செய்து, எலாஸ்டிக் உற்பத்தி செய்து வர்த்தகம் செய்கின்றனர். மற்ற 'ஜாப்ஒர்க்' தொழில் போன்று, எலாஸ்டிக் உற்பத்தியாளர்களையும் கருதுவது, வேதனையளிக்கிறது. திருநெல்வேலி, கடலுார், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இன்றைய தொழிலாளி, நாளைய முதலாளி என்பதற்கு, எலாஸ்டிக் உற்பத்தி மிகச்சிறந்த உதாரணம்.
ரப்பர், நுால் ஆகியவை மிக முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து நுால், கேரளா, அசாம், தாய்லாந்து போன்ற மாநிலங்களில் இருந்து ரப்பர் கொள்முதல் செய்கிறோம். செயற்கை நுாலிழையும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
பெட்ரோலிய விலை உயர்வு எங்கள் துறையை கடுமையாக பாதிக்கிறது. இந்த விலை ஏற்றத் தாழ்வு மிகப்பெரிய இழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கும் எண்ணம் உள்ளது. தனிப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டியிருக்கிறது.
கொரோனா பாதிப்பு, மின் கட்டண உயர்வு ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'டப்' திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். 45 நாள் 'பேமென்ட்' திட்டம் என்பது, எங்களுக்கு வரப்பிரசாதம். இதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். சிட்டோ, டிக் போன்றவற்றின் வாயிலாக புதிதாக தொழில் துவங்க வருவோருக்கு உரிய ஊக்குவிப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

