sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குட்டீஸ் குவிந்தனர்! நெல்மணிகளில் 'அ' எழுதி கல்விப்பயணத்தை துவங்கினர்: 'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வித்யாரம்பம் கோலாகலம்

/

குட்டீஸ் குவிந்தனர்! நெல்மணிகளில் 'அ' எழுதி கல்விப்பயணத்தை துவங்கினர்: 'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வித்யாரம்பம் கோலாகலம்

குட்டீஸ் குவிந்தனர்! நெல்மணிகளில் 'அ' எழுதி கல்விப்பயணத்தை துவங்கினர்: 'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வித்யாரம்பம் கோலாகலம்

குட்டீஸ் குவிந்தனர்! நெல்மணிகளில் 'அ' எழுதி கல்விப்பயணத்தை துவங்கினர்: 'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வித்யாரம்பம் கோலாகலம்

1


UPDATED : அக் 03, 2025 02:33 AM

ADDED : அக் 02, 2025 11:27 PM

Google News

UPDATED : அக் 03, 2025 02:33 AM ADDED : அக் 02, 2025 11:27 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'தினமலர்' பட்டம் இதழ், ஸ்ரீசக்தி கல்விக்குழுமங்கள், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ் வரி அம்பாள் கோவில் டிரஸ்ட் ஆகியன சார் பில், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ் வரி அம்பாள் கோவிலில் நடந்த 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியில், 350க்கும் மேற்பட்ட குழந்தைகள், நெல்மணிகளில் 'அ' என்று எழுதி, தங்கள் கல்வியைத் துவக்கினர்.

மங்களகரமான விஜயதசமி நன்னாளில், குழந்தைகளுக்கான கல்வி பயணத்தை துவக்கி வைக்கும், 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் கோலாகலமாக நடந்தது.

நவராத்திரி விழா கொண்டாட்டத்தில், 10வது நாளில் வரும் விஜயதசமி, வெற்றித்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இறையருள் பரிபூரணமாக நிரம்பியிருக்கும் இந்நாளில் துவங்கும் எந்தவொரு செயலாக இருந்தாலும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கான கல்வியை துவக்கி வைக்கும், 'வித்யாரம்பம்' நடத்தப்படுகிறது. 'தினமலர்' பட்டம் இதழ், ஸ்ரீசக்தி கல்வி குழுமங்கள் (ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி), ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் டிரஸ்ட் ஆகியன சார்பில், அவிநாசி அருகே ராக்கியாபாளையம் அடுத்த ஸ்ரீபுரம் ஐஸ்வர்யா கார்டன், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், வித்யாரம்பம் நடந்தது.

காலை, 8:30 மணிக்கு, குழந்தைகள் கல்வி நலன் வேண்டி, மகாசரஸ்வதி ேஹாமம், லட்சுமி ஹயக்ரீவர் யாகம், தட்சிணாமூர்த்தி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், வித்யாரம்பம் நிகழ்ச்சி துவங்கியது. திருப்பூர் ஸ்ரீசாரதா சத்சங்கம் சுவாமினி ஸ்ரீமஹாத்மானந்த சரஸ்வதி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், 'கிளாசிக் போலோ' நிர்வாக இயக்குனர் சிவராம், ஸ்ரீசக்தி கல்வி குழுமங்கள் சேர்மன் தங்கவேல், ஆடிட்டர் ராமநாதன், தெக்கலுார் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளியின் வைஸ் சேர்மன் தீபன் தங்கவேல், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் டிரஸ்ட் ஞானகுரு, டாக்டர்கள் துர்கா பரமேஸ்வரி, திவாகர் ஆகியோர், குழந்தைகளுக்கு, வித்யாரம்பரம் செய்து வாழ்த்தினர்.

தட்டில் பரப்பிய நெல்மணிகளில், மஞ்சள் கொம்பு கொண்டு, 350க்கும் மேற்பட்ட குழந்தைகள், 'அ' என்ற மூன்று முறை எழுதி, தங்கள் கல்வியைத் துவக்கினர்.

குழந்தைகளுக்கு ஸ்கூல்பேக்

* காலை, 8:00 மணி முதல், குழந்தைகளுடன் பெற்றோர் வரத்துவங்கினர்.

* குழந்தைகளுக்கு, ஸ்கூல் பேக், சிலேட் மற்றும் எழுது பொருட்கள் அடங்கிய 'கிட்', 'தினமலர்' பள்ளிக்கல்வி மலர் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

* காலை, 9:00 மணிக்கு துவங்கிய வித்யாரம்பம், 11:00 மணி வரை, பெற்றோர், குழந்தைகளுடன் வந்து ஆர்வமாக வித்யாரம்பம் செய்து வைத்தனர்.

* ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், ஒவ்வொரு குழந்தைகளுக்கும், 'ஸ்வீட் பாக்ஸ்' வழங்கப்பட்டது.

* வித்யாரம்பம் செய்து முடிந்ததும், பெற்றோர் மற்றும் குழந்தைகள் போட்டோ எடுத்து, உடனுக்குடன் 'பிரின்ட்' எடுத்து வழங்கப்பட்டது.

* ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூலில், 10 சதவீத தள்ளுபடி சலுகையுடன், பள்ளியில் சேர்க்கும் முகாமும் நடந்தது.

* அவிநாசி, சோமனுார், தெக்கலுார் பகுதிகளில் இருந்து, வாகனங்கள் வாயிலாகவும், பெற்றோரும், குழந்தைகளும் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

* ேஹாம பூஜை ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

* புதிய 'பேக்' வழங்கியதும், அதனை தோளில் மாட்டிக்கொண்டு, குட்டீஸ்கள், குதுாகலமாக கோவில் வளாகத்தில் ஓடியாடி மகிழ்ந்தது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது.






      Dinamalar
      Follow us