/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நன்றி அறிவிப்புடன் முடிந்த ஒன்றிய குழு கடைசி கூட்டம்
/
நன்றி அறிவிப்புடன் முடிந்த ஒன்றிய குழு கடைசி கூட்டம்
நன்றி அறிவிப்புடன் முடிந்த ஒன்றிய குழு கடைசி கூட்டம்
நன்றி அறிவிப்புடன் முடிந்த ஒன்றிய குழு கடைசி கூட்டம்
ADDED : ஜன 04, 2025 12:16 AM
திருப்பூர்; காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழுவின் கடைசி கூட்டம் நன்றி அறிவிப்போடு நடந்தது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழுவின் கடைசி கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய அலுவலக அரங்கி நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியகுழு தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் தலைவர் உள்ளிட்டோர் பொறுப்பேற்ற பின், நீண்ட காலமாக நிறைவேற்றபடாமல் இருந்த பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உரிய ஊராட்சி அமைப்புகளுடன், இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இரண்டாண்டு கொரோனா பாதிப்பு; சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் அலுவலர்கள் சிறப்பாகப் பணியாற்றினர்.
இதற்காக அனைத்து அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு ஒன்றிய குழு சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. ஐந்தாண்டு கால பதவிக்காலம் நிறைவடைந்து கடைசி கூட்டம் நடத்தி விடைபெற்ற மக்கள் பிரதிநிதிகளை அலுவலர்கள் வழியனுப்பி வைத்தனர்.