/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்டவாளம் அருகே கொழுந்துவிட்ட தீ; பெட்ரோல் 'வேகன்'களுடன் கடந்த ரயில்
/
தண்டவாளம் அருகே கொழுந்துவிட்ட தீ; பெட்ரோல் 'வேகன்'களுடன் கடந்த ரயில்
தண்டவாளம் அருகே கொழுந்துவிட்ட தீ; பெட்ரோல் 'வேகன்'களுடன் கடந்த ரயில்
தண்டவாளம் அருகே கொழுந்துவிட்ட தீ; பெட்ரோல் 'வேகன்'களுடன் கடந்த ரயில்
ADDED : பிப் 21, 2025 12:22 AM

திருப்பூர்; தண்டவாளம் அருகே தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், பெட்ரோல் ஏற்றிய 'வேகன்'களுடன் ரயில் கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் - எஸ்.ஆர்.சி., மில் உயர்மட்ட பாலம் இடையே ரயில் தண்டவாளத்தை ஒட்டிய காலியிடத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவியது. 50 மீ., துாரம் கொழுந்துவிட்டு எரிந்ததால், தண்டவாள பகுதி முழுதும் புகை மண்டலமாக மாறியது. ரயில்கள் வருவது கூட தெரியவில்லை.
அப்போது, திருப்பூர் - ஈரோடு வழித்தடத்தில் 70க்கும் மேற்பட்ட 'வேகன்'களுடன் பெட்ரோல் நிரப்பிய ரயில் வந்தது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் கொழுந்து விட்டு தீ எரிந்து கொண்டிருந்ததால், பெட்ரோல் வேகன்களுடன் ரயில் கடந்ததைப் பார்த்தவர்கள் பதட்டமடைந்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு வந்து தீ எப்படி பற்றியது, எங்கிருந்து எவ்வளவு துாரம் பரவியது, இருபுறம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை தாண்டி, ஏறிக்குதித்து யாரேனும் வேண்டுமென்றே தீ வைத்தனரா, வீசியெறிந்த பீடி, சிகரெட் துண்டு மூலம் தீ பற்றியதா என்று விசாரித்தனர்.