தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை

 தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை

 தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை


ADDED : பிப் 09, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், மழை மறைவு பிரதேசம் ஆகும். அத்திக்கடவு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்த போதிலும் அது நான்கில் ஒரு பகுதி தேவையை கூட பூர்த்தி செய்யவில்லை.

பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வற்றி விட்டது. பொதுமக்கள் தண்ணீருக்காக ஏங்குகின்றனர்.

வசதி படைத்தவர்கள் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கூலி வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு அவர்களின் பொருளாதாரம் இல்லை.

கோவை - திருச்சி ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பொழுது அத்திக்கடவு குடிநீர் பைப் பல இடங்களில் உடைந்து விட்டது. இதனால், புதிதாக பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அடுத்த மாதத்தில் தான் பணி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, அதுவரை லாரி தண்ணீரை வழங்கி குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us