/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விறகு ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது
/
விறகு ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது
ADDED : பிப் 16, 2025 02:39 AM

திருப்பூர்: பொள்ளாச்சியில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு விறகு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொள்ளாச்சியில் இருந்து திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு விறகு ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று காலை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தது. கொங்கு மெயின் ரோடு செல்வதற்காக, அப்பகுதியிலுள்ள வளைவில் லாரி திரும்பிய போது, பாரம் தாங்காமல் லாரி திடீரென நடுரோட்டில் கவிழ்ந்து விழுந்தது. இதனால், ரோட்டில் விறகுகள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தது. விபத்து காரணமாக, திருப்பூர், பி.என்., ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற போக்குவரத்து போலீசார் லாரியை அப்புறப்படுத்தினர்.

