தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தன்னம்பிக்கை எனும் மந்திரச் சொல் :முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளி மாணவர்கள் அசத்தல்

தன்னம்பிக்கை எனும் மந்திரச் சொல் :முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளி மாணவர்கள் அசத்தல்

தன்னம்பிக்கை எனும் மந்திரச் சொல் :முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளி மாணவர்கள் அசத்தல்


UPDATED : செப் 29, 2026 10:53 PM

ADDED : செப் 29, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 10:53 PM ADDED : செப் 29, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர்,சிக்கண்ணா அரசு கல்லுாரி மைதானத்தில் அமைந்துள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம் மற்றும் உள்ளரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

கண்பார்வையற்றோர், காது கேளாதோர், ஊனமுற்றோர், சிந்தனை மற்றும் செயல் தன்மை குறைபாடுடையோர் என, நான்கு பிரிவுகளின் கீழ் நடந்த போட்டிகளில், 452 பேர் பங்கேற்றனர். இதில், இறகுபந்து, கபடி, எறிபந்து, வாலிபால், டேபிள் டென்னிஸ் போட்டிகளை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், 100 மீ., ஓட்டம் மற்றும் குண்டெறிதல் போட்டிகளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தங்களது பயிற்றுவிப்பாளர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி, முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ஆர்வத்துடன் விளையாடி வெற்றி பெற்றனர். வெயில் சுட்டெரித்த போதிலும், தங்களின் ஆர்வத்தில் அந்த வெயிலின் சுடுதலைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்களை பெற்றோரும், பயிற்றுவிப்பாளர்களும் உற்சாகமூட்டினர்.

அடிப்படை வசதி

இன்றி அவதி

--------------

மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்ற போதிலும், மைதானத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்தது. போதியளவில் பந்தல் அமைக்கப்படாததால், மிகச் சிறிய பந்தலுக்குள் மாணவர்களும், பெற்றோரும் நெருக்கடிக்கு மத்தியில் அமர்ந்தும் நின்றும் அவதியுற்றனர். மைதானத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டிருந்த போதிலும், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், விளையாடி சோர்ந்து போன மாணவர்களுக்கு 'எனர்ஜி' பானங்கள் தயாரித்துக் கொடுக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல் திண்டாடுவதைப் பார்க்க முடிந்தது. போட்டிகளை முறைப்படி நடத்தவும், ஏற்பாடுகளை கவனிக்கவும், 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், 5 பேர் மட்டுமே பணிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மாநில அளவில், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த, 'முதலமைச்சர் கோப்பை' போட்டியிலேயே இதுபோன்ற அடிப்படை வசதி குறைபாடுகளும், ஒருங்கிணைப்பற்ற சூழலும் நிலவியது பெற்றோர், பார்வையாளர்களை அதிருப்தியடைய செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us