/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் தேர்த்திருவிழா துவக்கம் பாரம்பரிய முறைப்படி 'பேரிகை' முழங்கி அறிவிப்பு
/
மாரியம்மன் தேர்த்திருவிழா துவக்கம் பாரம்பரிய முறைப்படி 'பேரிகை' முழங்கி அறிவிப்பு
மாரியம்மன் தேர்த்திருவிழா துவக்கம் பாரம்பரிய முறைப்படி 'பேரிகை' முழங்கி அறிவிப்பு
மாரியம்மன் தேர்த்திருவிழா துவக்கம் பாரம்பரிய முறைப்படி 'பேரிகை' முழங்கி அறிவிப்பு
ADDED : ஏப் 01, 2025 10:49 PM

உடுமலை, ;உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பாரம்பரிய கருவியான 'பேரிகை ' முழங்கி, நோன்பு சாட்டப்பட்டது குறித்து மக்களுக்கு அறிவித்து, திருவிழா துவங்கியது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று மாலை, பக்தர்கள் மல்லி, நொச்சி, முல்லை, ரோஜா, தாமரை, செவ்வந்தி என பல்வேறு வகை மலர்களை கொண்ட கூடைகளை பிரசன்ன விநாயகர் கோவிலிலிருந்து, மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பல்வேறு வகை வண்ண மலர்களால், வேதமந்திரங்கள் முழங்க, அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனிடம் அனுமதி பெற்று, திருவிழா பத்திரிகை வாசிக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி, 'பேரிகை' எனப்படும் முரசு வாத்தியம் கொண்டு, நோன்பு சாட்டுதல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவில், வரும், 8ம் தேதி, இரவு, 8:15 மணிக்கு, கம்பம் போடுதல், 10ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, வாஸ்துசாந்தி, கிராமசாந்தி, 11ம் தேதி, மதியம், 12:00 மணிக்கு, கொடியேற்றம், மதியம், 2:00 மணிக்கு, பூவோடு ஆரம்பம் 15ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு பூவோடு நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது.
16ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு, பிற்பகல், 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம், வரும், 17ம் தேதி, மதியம், 4:15 மணிக்கு நடக்கிறது.
18ம் தேதி காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு, குட்டை திடலில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
19ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடியிறக்கம், 11:00 மணிக்கு, மகா அபிேஷகம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு, 11ம் தேதி முதல், 18 ம் தேதி வரை, தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில், தினமும் ஆன்மிக பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.