/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே'
/
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே'
ADDED : ஆக 17, 2025 11:47 PM

திருப்பூர்; சிக்கண்ணா அரசு கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள், பசுமையான தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் கடந்த 1998 - 2001ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நேற்று காலை நடந்தது. கல்லுாரியில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அனைத்து துறைகளை சேர்ந்த முன்னாள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மறைந்த பேராசிரியர், முன்னாள் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பேராசியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்களான தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஈசன் முருகசாமி, மாநகராட்சி துணை கமிஷனர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில், கல்லுாரிக்கு, ஐந்து பீரோக்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு, கல்லுாரிக்கு தேவையான அடிப்படை வசதிகள், பொருளாதார ரீதியாக கல்வி, வேலைக்கு சிரமப்படுபவர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டது. மதியம் உணவு ஏற்பாடும், மாலை கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கல்லுாரி பருவ நினைவுகளையும், வகுப்பறைகளை பார்வையிட்டு பகிர்ந்து மகிழ்ந்தனர்.
---
மேடை படத்தில் நீதிபதியை மட்டும் கட் செய்யவும்...
---
முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஜீவா பாண்டியன்; இதில் பங்கேற்றோர்.