/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமைகிறது அருங்காட்சியகம் நீண்ட கால கனவு நனவாகிறது
/
அமைகிறது அருங்காட்சியகம் நீண்ட கால கனவு நனவாகிறது
ADDED : ஏப் 19, 2025 11:35 PM

தமிழ் நாகரிகம் துவங்கிய காலம் தொட்டு, படிப்படியான நாகரிக மாற்றத்தை கண்ட தொல்லியல் நகரங்களின் வரிசையில், கொங்கு மண்டலத்தில் திருப்பூரும் இடம் பெற்றிருக்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளமாக, மாவட்டம் முழுக்க ஆங்காங்கே தொல்லியல் எச்சங்களும், மிச்சங்களும் தென்படுகின்றன.மாவட்டத்தில் பழமையான கோவில்கள், வரலாற்றுச்சின்னங்கள் அதிகளவில் உள்ளன. அமராவதி ஆற்றங்கரை, நொய்யல், கவுசிகா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள், அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக உள்ளன. பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் திட்டைகள், அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் கொடுமணலில் அரிய வகை கல்மணிகள், வளையல், சங்குகள், மான் கொம்பு, கூரை ஓடு, கீறல் வரைவு மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு, சிவப்பு, கருப்பு நிற மண்கலங்கள், சுடுமண் பொருட்கள் என, ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டு கோரிக்கை
ஏற்றது தமிழக அரசு
'திருப்பூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைத்து மாவட்டம் முழுக்க சேகரிக்கப்படும் தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை, வரலாற்று ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். 'திருப்பூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.---