/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தென்னீரா' நிறுவனத்திற்கு மத்திய அரசின் தேசிய விருது
/
'தென்னீரா' நிறுவனத்திற்கு மத்திய அரசின் தேசிய விருது
'தென்னீரா' நிறுவனத்திற்கு மத்திய அரசின் தேசிய விருது
'தென்னீரா' நிறுவனத்திற்கு மத்திய அரசின் தேசிய விருது
ADDED : செப் 05, 2025 01:08 AM

பல்லடம்:பல்லடத்தில் உள்ள உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தேசிய அளவில் சிறந்த ஏற்றுமதி நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தென்னை விவசாயிகள் 1,200க்கும் மேற்பட்டோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். 'தென்னீரா' என்ற பெயரில், 'நீரா' பானத்தை தயாரித்து, தமிழகம் மட்டுமின்றி வளைகுடா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.
செப்., 2ம் தேதி கேரளாவின் அங்கமாலியில், தென்னை வளர்ச்சி வாரியம் சார்பிலான விருது வழங்கும் விழாவில், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தென்னீரா நிறுவனத்துக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான, தேசிய அளவிலான சிறந்த ஏற்றுமதி நிறுவனத்துக்கான விருதை வழங்கினார்.
இதன் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
இயற்கையான முறையில் நாங்கள் தயாரிக்கும் தென்னீரா பானம், 'எப்.எஸ்.எஸ்.சி., - 22000' உலக தரச் சான்றை பெற்றுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது. சிறந்த ஏற்றுமதி நிறுவனத்துக்கான விருது கிடைத்தது, எங்கள் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்.
இவ்வாறு அவர் கூறினார்.