sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இடுப்பை உடைக்கும் தேசிய நெடுஞ்சாலை

/

இடுப்பை உடைக்கும் தேசிய நெடுஞ்சாலை

இடுப்பை உடைக்கும் தேசிய நெடுஞ்சாலை

இடுப்பை உடைக்கும் தேசிய நெடுஞ்சாலை


ADDED : ஜூலை 09, 2025 10:00 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - தாராபுரம், உடுமலை - பல்லடம், பொள்ளாச்சி - தாராபுரம் (ஒரு பகுதி) மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படுகிறது.

திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் ஆற்றுப்பாலம் முதல் அந்தியூர் வரை, தேசிய நெடுஞ்சாலை உடுமலை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து ரோடுகளிலும் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மேம்பாட்டு திட்டங்கள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

குறிப்பாக, உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு பல முறை கருத்துரு தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த ரோடு, சின்னவீரம்பட்டி அருகே, நான்கு வழிச்சாலையுடன் இணையும் பகுதி மேம்படுத்தப்படாததால் வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். ஏரிப்பாளையம், சமத்துவபுரம், குடிமங்கலம் நால்ரோடு, பெரியபட்டியில் அபாய வளைவுகளை மேம்படுத்த வேண்டும்.

உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் நகரப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல், மழை நீர் வடிகால் அமைப்பும் இல்லாததால், தொடர் பாதிப்புகள் ஏற்படுகிறது.

பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் அருகே, கொள்ளுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில், ரோட்டோர குழிகளால் விபத்து ஏற்படுகிறது. உடுமலையில், தேசிய நெடுஞ்சாலையின் நிலைதான் படுமோசமாக உள்ளது. மடத்துக்குளத்தில் இருந்து மைவாடி பிரிவு வரை, மழை காலத்தில் அடித்து வரப்பட்ட மண் ரோட்டோரத்தில் பல அடிக்கு தேங்கி, இரு சக்கர வாகன ஓட்டுநர்களை வீழ்த்துகிறது. மைவாடி பிரிவு அருகே அமைக்கப்பட்ட மையத்தடுப்பு மாயமாகியுள்ளது.

பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, மழை காலத்தில் தேசிய நெடுஞ்சாலை சாக்கடை கால்வாயாக மாறி விடுகிறது. எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளாமல், எச்சரிக்கை, தகவல் பலகை இல்லாமல், குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலை படுமோசமாகி விட்டது.

நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவு பெற்ற பின், இந்த ரோட்டின் பராமரிப்பு மாநில நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகாவது, பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'தாராபுரம் கோட்டம், உடுமலை, மடத்துக்குளம் உட்கோட்ட ரோடுகளில், கடந்த சில மாதங்களாக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ், மாநில நெடுஞ்சாலைகளில் தொடர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மழைக்கு முன், பாலங்கள் பராமரிக்கப்பட்டு, வடிகால்களும் துார்வாரப்பட்டுள்ளது. ரோட்டோர புதர்களும் அகற்றப்படுகிறது. ரோடு விரிவாக்கத்துக்கு, அரசு நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us